search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதய் ஜாகர்"

    கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி லஞ்சம் தந்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ‘சீட்’ வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் தற்போதைய எம்.பி.யும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பர்வேஷ் வர்மாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுபவர், பல்பீர் சிங் ஜாக்கர்.

    இவர் ‘சீட்’ வாங்குவதற்காக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுத்தார் என்று புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை எழுப்பி இருப்பவர், வேறு யாருமல்ல; வேட்பாளரின் மகன் உதய் ஜாக்கர்.

    ஆனால் இந்தப் புகாரை பல்பீர் சிங் ஜாக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இதையொட்டி அவர் கூறுகையில், “ இந்தப் புகாருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி என் மகனிடம் எதுவும் விவாதிக்கவில்லை. நான் அவரிடம் பேசுவதே மிகவும் அபூர்வம். அவர் பிறந்த நாளில் இருந்து தாய்வழி தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து வருகிறார். நான் என் மனைவியை 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். அவர் என்னுடன் 6 அல்லது 7 மாதம்தான் சேர்ந்து வாழ்ந்தார்” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “அரசியல் கட்சிகளில் உள்ள சமூக விரோத சக்திகள் என் மகனின் அறிக்கைக்கு பின்னால் உள்ளன” எனவும் கூறி உள்ளார்.

    இருப்பினும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனை பா.ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

    இதையொட்டி அந்தக் கட்சியின் டெல்லி தலைவர் பிரவிண் காண்டல்வால் கூறும்போது, “கணக்கில் வராத பணம், தேர்தலில் பயன்படுத்தப்படுவது தொடர்பான முக்கிய விவகாரம் இது. இதில் கெஜ்ரிவாலையும், அவரது குழுவினரையும் அம்பலப்படுத்த வேண்டும். லஞ்சத்தைப் பெற்றதற்கும், தவறான வழிகளில் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் இது செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

    அத்துடன் இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், பல்பீர்சிங் ஜாக்கர் உள்ளிட்டவர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    உதய் ஜாக்கர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இன்று தேர்தல் நடக்கிற நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்பீர் சிங் ஜாக்கர் லஞ்சம் ரூ.6 கோடி தந்தார் என்ற புகாரை, அவரது மகனே எழுப்பி இருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம் என ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவானது ஆம் ஆத்மி கட்சி.

    ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, டெல்லி சட்டசபையில் போட்டியிட்ட அக்கட்சி 2013-ல் ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக நாளை டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ளது.



    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேற்கு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக எனது தந்தை பல்பீர் சிங் ஜாகர் போட்டியிடுகிறார். எனது தந்தை கட்சியில் சேர்ந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அங்கு போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நானே சாட்சி என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளரின் மகன் இப்படி பகிரங்கமாக பேட்டியளித்தது தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் மகனது குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×